Latest News :

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை - சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார்
Wednesday July-04 2018

கெளதமி, மனீஷ கொய்ராலா, மம்தா மோகந்தாஸ் என நடிகைகள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்டும் வந்திருப்பதுடன், அதுகுறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த சோனாலி பிந்த்ரே தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

‘காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனாலி பிந்த்ரே, பல இந்திப் படங்களில் நடித்திருப்பதுடன், பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

 

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்துவிட்ட இவர், தற்போது டிவி விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில், தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து நடிகை சோனாலி பிந்த்ரே வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரை சந்தித்து சில பரிசோதனைகளை எடுத்துக் கொண்டேன். பரிசோதனையின் முடிவில் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததது. அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு உறவினர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். புற்றுநோயுடன் போராடி விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார். என்று குறிப்பிட்டிருக்கிறார். 

 

தற்போது 43 வயதாகும் சோனாலி பிந்த்ரேவுக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

Related News

2950

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery