நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’, விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த நிலையில், ‘வெர்ஜின் பசங்க’ என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை மனிஷா ஸ்ரீ, நடித்து வருகிறார். கோபி என்பவர் இயக்கும் இந்த வெப் சீரிஸின் ஒரு பகுதி தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதற்கு காரணம், இந்த வீடியோவில் மனிஷா ஸ்ரீ பேசும் வசனம் தான்.
சில நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் மனிஷா ஸ்ரீ பேசியிருக்கும் வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருப்பதோடு, இளைஞர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.
அப்படி என்ன இருக்கிறது, இந்த வீடியோவில்! என்று யோசிப்பவர்கள் இதோ அந்த வீடியோ பாருங்க, ஷாக்கியிடுவீங்க...
சமூக வலைதளங்களில் வைரலாகும் நடிகை மனிஷாஸ்ரீ வீடியோ! நீங்களும் பாருங்க, ஷாக்காயிடுவீங்க...@Manishaa_shree
— CinemaInbox (@CinemaInbox) July 6, 2018
#VirginPasanga #Webseries #viralvideo pic.twitter.com/tW5mcBtMwT
இந்த வெப் சீரிஸில் நடித்த முடித்த பிறகு இந்தி படம் ஒன்றில் மனிஷா ஸ்ரீ நடிக்க இருக்கிறாராம். அதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...