Latest News :

ரசிகர்களை மெர்சலாக்க விஜய் செய்த அதிரடி! - அதிர்ச்சியில் உரைந்த படக்குழு!
Tuesday August-22 2017

நாளை மறுநாள் வெளியாக இருக்கும் அஜித்தின் ‘விவேகம்’ படம் குறித்த பரபரப்பு ஒரு பக்கம் ஒருக்க, தீபாவளியன்று வெளியாக இருக்கும் ‘மெர்சல்’ படத்தைப் பற்றிய சில தகவல்கள் கசிந்து கோடம்பாக்கத்தில் இரட்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அஜித், விஜய் என இந்த இரண்டு முன்னணி நடிகர்களும், தாங்கள் நடிக்கும் படங்களில் சில ரிஸ்க்கான காட்சிகளில், டூப் இல்லாமல் தாங்களே நடித்து, ரிஸ்க் எல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல, என்று நிரூபித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில், ‘மெர்சல்’ படத்தில் விஜயின் அறிமுகமே புலியை அடக்குவது போல அமைக்கப்பட்டிருக்கிறதாம். இதற்காக கிராபிக்ஸ் செய்யலாம் என்று இயக்குநர் சொன்னாலும், அதற்கு மறுப்பு தெரிவித்த விஜய், நிஜ புலியை வைத்தே எடுக்கலாம், என்று சொல்லிவிட்டாராம். 

 

தளபதி சொன்ன பிறகு எப்படி மறுக்க முடியும், வெளிநாட்டுக்கு பயணித்து அங்கு நன்றாக பழக்கப்பட்ட புலி ஒன்றை வைத்து இந்த ஆக்‌ஷன் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். பழக்கப்பட்ட புலியாக இருந்தாலும், எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாமே, என்ற அச்சத்தில் படக்குழுவினர் உரைந்துப் போக, எந்தவித பதற்றமும் இல்லாமல் புலியுடன் சண்டைப்போடு அந்த காட்சியில் அசத்தினாராம் விஜய்.

 

தனது ரசிகர்களை தலைப்பில் மட்டும் அல்லாமல், படத்தின் காட்சிகள் மூலமும் மெர்சலாக்க நினைத்து விஜய் எடுத்த ரிஸ்க் அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Related News

299

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery