மோகன்லால் நடிப்பில் வெளியான ‘வெளிபடிண்டே புஸ்தகம்’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘எண்டமேட ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு கல்லூரி மாணவிகள் நடனம் ஆடி அந்த வீடியோவை யூடியூபில் அப்லோட் செய்தார்கள். இதனை தொடர்ந்து அந்த வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து பலர் அந்த பாடலுக்கு நடனம் ஆடி அப்லோட் செய்ய தொடங்கினார்கள்.
இதற்கிடையே, அப்பாடலின் ஒரிஜனல் வீடியோவை ரசிகர்கள் தேடி பிடித்து பார்க்க தொடங்கினார்கள். இதனால், 8 கோடி பேர் அந்த பாடலை பார்த்தார்கள்.
இந்த நிலையில், ஜிமிக்கி கம்மல் பாடல் யூடுயூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அப்பாடலை பார்க்க நினைப்பவர்கள் யூடியூபில் தேடி ஏமாற்றம் அடைகிறார்கள்.
இது குறித்து அப்படாலுக்கு இசையமைத்த ஷான் ரகுமான் கூறுகையில், ”ஜமிக்கி கம்மல் பாடல் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. பாடலை வாங்கிய நிறுவனம் அதை நீக்கியுள்ளது. காப்புரிமை பிரச்னைகளுக்காக இந்தப் பாடல் நீக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இந்தப் பாடல் நீக்கப்படாமல் இருந்திருந்தால், உலக அளவில் அதிகமாக பார்த்து ரசிக்கப்பட்ட மலையாளப் பாடல் என்ற பெருமையப் பெற்றிருக்கும். இந்தப் பாடலை வாங்கியவர்வர்களும் மலையாள சினிமாவைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் இதை வெறும் வணிகமாகத் தான் பார்க்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன்...
காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, ’அங்காடித்தெரு’ மகேஷ், ’திருக்குறள்’ குணாபாபு நடிப்பில், 1990-களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தடை அதை உடை’...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'...