சென்னை,மார்ச் 29 : தனது கனீர் குரலினால் தமிழர்களை ஆட வைத்த பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ படத்தில் “கலாசலா கலாசலா...” என்ற பாடலை பாடி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தார். இந்த பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதேபோன்ற ஒரு அதிரடி குத்து பாடலை ‘தொல்லைக்காட்சி’ படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார்.
நா.முத்துக்குமார் எழுதிய இந்த பாடலுக்கு தரண் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்த பாடல் குறித்து எல்.ஆர்.ஈஸ்வரி கூறுகையில், “இந்த பாடலில் இருக்கும் வரிகளும் இசையும் அருமையாக இருக்கிறது. மீண்டும் ஒரு “கலாசலா” பாடலைப்போல் வெற்றி பெரும்” என்றார்.
இந்த பாடலின் படபிடிப்பிற்காக கும்பகோணம் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைத்து படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கயலாலயா நிறுவனம் சார்பில் பாலசெந்தில்ராஜா தயாரிக்க, எம்.சாதிக்கான் இயக்கியுள்ள இப்படத்தில், அஸ்வின், ஜனனி ஐயர், ஆதவன், சுப்பு பஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...