நடிகை நயந்தாரா தனது ஒவ்வொரு படமும் ஹிட் ஆகும்போதும், தனது சம்பளத்தை உயர்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாரா, ஹீரோக்களுக்கு ஜோடி என்றால் ரூ.4 கோடி வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நயந்தாராவின் வழியை தற்போது காஜல் அகர்வாலும் பின்பற்ற தொடங்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உள்ள காஜல் அகர்வால், ‘விவேகம்’ மற்றும் ‘மெர்சல்’ படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் பெரிய ஹீரோக்கள் படங்கள் என்பதால், இப்படங்கள் ரிலீஸிற்கு பிறகு, காஜல் அகர்வாலின் தமிழ் மார்கெட் ராக்கெட் வேகத்தில் உயரும் என்று கருதப்படுகிறது.
மேலும், இரண்டு படங்களும் நிச்சயம் வெற்றி பெற்று வியாபார ரீதியாகவும் நல்ல வசூலை பெறும் என்று கருதப்படுவதால், காஜல் அகர்வால் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்கும் காஜல் அகர்வால், தற்போது தனது சம்பளத்தை ரூ.2 கோடி வரை உயர்த்தியுள்ளாராம். மேலும், தனது ஒவ்வொரு படங்களின் வெற்றியை வைத்து தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...