பிரபு தேவா நடிப்பில் விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘லக்ஷ்மி’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
ஆக்ஷன், காதல், திரில்லர் என்று எந்த மாதிரியான களத்தில் பயணித்தாலும், அதன் ஒரு பாதியில் குடும்ப பின்னணியோடு கதை சொல்லும் இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குநர் விஜய். தனது அனைத்துப் படங்களிலும் இதை கடைபிடிக்கும் விஜய், தற்போது நடனம் மற்றும் இசையை மையமாக வைத்து இயக்கியிருக்கும் படமே ‘லக்ஷ்மி’.
பிரபு தேவாவுடன் குழந்தைகளின் விருப்பமான ஐகான் டித்யா பண்டே நடித்திருக்கும் இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் ஏற்கனவே வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், சமீபத்தில் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு எந்தவித கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய படம் என்று சொல்வதன் குறியீடாக இருக்கும் யு சான்றிதழ் கிடைத்ததே இப்படத்தின் முதல் வெற்றி என்று கொண்டாடும் படக்குழுவினர் விரைவில் இப்படத்தை வெளியீட்டு, வெற்றியை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள்.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...