பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ வரும் ஜூலை 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயீஷா நடிக்க, மேயாத மான் பிரியா பவானி சங்கர், மற்றொரு நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், சூரி, பொன்வன்னன், ஸ்ரீமன், செளந்தரராஜன், மெளனிகா, யுவரானி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் வரும் ஜூலை 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...