Latest News :

அரவிந்த் சாமியுடன் மாலத்தீவுக்கு செல்லும் அமலா பால்!
Tuesday August-22 2017

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை சித்திக் இயக்கி வருகிறார். இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்னா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோர் நடிக்க, ‘தெறி’ படத்தில் விஜயின் மகளாக நடித்த நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகாவும் நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்க, சிறப்பு தோற்றத்தில் நிகிஷா பட்டேல் நடிக்கிறார்.

 

தற்போது சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைப்பெற்று வரும் நிலையில், இப்படத்தில் ஒரு பாடல் காட்சி மாலத்தீவில் படமாக்கப்பட உள்ளது. அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டுவிட்டால் மொத்த படப்பிடிப்பு முடிவடைகிறது. எனவே அரவிந்த் சாமி - அமலா பால் உள்ளிட்ட ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படக்குழுவினர் வரும் 27 ஆம் தேதி மாலத்தீவுக்கு செல்கின்றனர்.

 

அம்ரேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்ய, ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார். கே.ஆர்.கெளரி சங்கர் படத்தொகுப்பு செய்ய, மனி சுசித்ரா புரொடக்‌ஷன் டிசைனர் பணியை மேற்கொள்கிறார். கலை துறையை ஜோசப் நெல்லிகன் கவனிக்க, சண்டைப்பயிற்சியை பெப்சி விஜயன் மேற்கொள்ள, பிருந்தா நனடம் வடிவமைக்கிறார். 

 

எம்.ஹரிசினி தயாரிப்பில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Related News

301

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery