Latest News :

சர்கார் விவகாரம் - விஜய் பதுங்கியதற்கு இது தான் காரணமாம்!
Thursday July-12 2018

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘சர்கார்’ படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிராக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 

அதில் இடம் பெற்ற விஜய் சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த ராமதாஸ், சிகரெட் நிறுவனங்களிடம் விஜய் பல கோடி பணம் பெற்றதாக குற்றம் சாட்டினார். ஆனால், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் பேச்சுக்கு விஜய் மற்றும் சர்கார் பட தரப்பு எந்த விளக்கமும், பதிலும் தராமால் அமைதி காத்தது.

 

இதற்கிடையே, இந்த விவாகரத்தில் தமிழக அரசும் தலையிட்டது. தமிழக அரசின் பொது சுகாதார அமைப்பு, சர்கார் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் சிகரெட் புகைக்கும் போட்டோவை நீக்கவில்லை என்றால் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தது. இதையடுத்து அந்த புகைப்படத்டை படக்கு நீக்கிவிட்டது.

 

sarkar

 

மேலும், விஜய், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ரூ.10 கோடியை கேன்சர் மருத்துவமனைக்கு வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

 

இவை அனைத்துக்கும் எந்தவித ரியாக்‌ஷனும் காட்டாமல் விஜய் அமைதி காத்து பதுங்கி வருகிறார். அதே சமயம், அவரது இந்த பதங்களுக்கு காரணம், அவர் பெரிதாக பாய இருப்பது தான், என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

சர்கார் படத்தின் போஸ்டர் சும்மா ஆரம்பம் தானாம். படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டு இருக்கிறதாம். அரசியல் வியாபாரம், ஜாதி அரசியல் என்று பல விஷயங்களையும் அதிரடியாக பேசியிருக்கும் விஜய், படம் ரிலீஸானால் இந்தியாவையே அதிர வைத்துவிடுவார் என்று சமீபத்திய தகவல் கூறுகிறது.

 

Vijay

 

எனவே, இது போன்ற சின்ன விஷயங்களுக்கு எந்தவித ரியாக்‌ஷனும் கொடுக்காமல் அமைதியாக இருந்து படத்தின் மூலம் இவர்கள் மீது பாயலாம் என்ற முறையில் விஜய் தற்போது பதுங்கி வருவதாக கூறப்படுகிறது.

 

விஜயின் இந்த பாய்ச்சல் அவரது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்பது உறுதி.

Related News

3010

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

Recent Gallery