Latest News :

மயில்சாமியின் மகன் யுவன் நடிக்கும் ‘வாய்க்கா தகராறு’
Thursday July-12 2018

ராயல் சினி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் பி.முருகவேல் தயாரிக்கும் படம் ‘வாய்க்கா தகராறு’. 

 

இதில் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கிறா.ர் இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார். வர்ஷிகா நாயகா, நைனா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பவர் ஸ்டார், சிங்கம் புலி, மனோபாலா, போண்டா மணி, கராத்தே ராஜா, சுரேகா ரேவதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

தேவா இசையமைக்கும் இப்படத்திற்கு முத்துராஜ் ஒளிப்பதிவு செய்ய, கவிமணி, பி.முகவேல், சாரதா, கோனேஸ்வரன், சுரேஷ் கே.வெங்கிடி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். அசோக் ராஜா நடனம் அமைக்க, ஜான் கென்னடி கலையை நிர்மாணிக்கிறார். நாக் அவுட் நந்தா, கஜினி குபேரன் ஆகியோர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஆறுமுகம் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

 

இப்படத்தின் கதை, வசனம் எழுதி பி.முருகவேல் தயாரிக்க, திரைக்கதை அமைத்து சுரேஷ் கே.வெங்கிடி இயக்குகிறார். இவர் மலையாளத்தில் இயக்குநர் கே.மது, சுதிசங்கர் போன்ற இயக்குநர்களிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர். இவர் இயக்கும் முதல் படம் இது.

 

படம் குறித்து கூறிய சுரேஷ் கே.வெங்கிடி, “என்று தணியும் என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும், ‘யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை’ படத்தில் நடித்த விஜய் ராஜ் இருவரையும் வைத்து நான் முதல் படத்தை இயக்குகிறேன். இது ஒரு செண்டிமெண்ட் கதை. இதை கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம்..

 

ஒரு ஆண், சூழ்நிலை காரணமாக அவனுக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு ஆண் மகன்கள். சக்களத்தி சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய பெண்கள் ஒற்றுமையாக வாழ, சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டிய சகோதரர்கள் மோதிக் கொள்ள, இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதா இல்லையா என்பது தான் கதை.

 

படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை திருப்போரூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமப்புற வாழ்வியலை அப்படியே பதிவு செய்துள்ளோம். கிராமிய பாடல்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி தேவா சாருக்கு. தூள் கிளப்பி இருக்கிறார். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.” என்றார்.

Related News

3012

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘மா வந்தே’ முதல் பார்வை!
Wednesday September-17 2025

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery