பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகம் சற்று ஸ்ருதி குறைவாகவே ஒளிபரப்பாகி வருகிறது. ஓவியா - ஆரவ் போன்ற ஒரு காதல் ஜோடியை உருவாக்குவது, காயத்ரி ரகுராம் போல மும்தாஜை உருவாக்குவது, பரணியை போல சென்ராயனை அசிங்கப்படுத்துவது என்று பல முயற்சிகளை நிகழ்ச்சி தயாரிப்பு குழு மேற்கொண்டாலும் அனைத்தும் தோல்வியாகவே முடிந்தது.
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2 இருக்கும் போட்டியாளகள் அனைவரும் நடிப்பதாகவே மக்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை விளம்பரம் செய்வதை தொடர்ந்து, அப்படத்தின் ஹீரோ கார்த்தி, இயக்குநர் பாண்டிராஜ், சூரி ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
அவர்களுடன் பேசிய பிக் பாஸ் போட்டியாளர்கள், குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கார்த்தியிடம் கேட்க, அவர், எல்லோரும் நடிப்பதாக மக்கள் கருதுகிறார்கள், உங்களது உண்மையான முகத்தை காட்டுங்கள், என்று கூறினார்.
மேலும், இங்கு சுத்தமே இல்லாமல் இருக்கிறீர்கள், உங்களை மன்னிக்கவே முடியாது, எல்லோரும் பார்க்கிறார்கள், என்று சற்று கோபமாகவும் அவர்களிடம் பேசினார்.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...