தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைப் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதோடு, குடும்பபாங்கான படங்களும் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், ’எதிர் நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’ ஆகிய படங்களில் இயக்குநர் துரை செந்தில்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஹரீஷ் ராம், நகைச்சுவை குடும்ப அட்வென்சர் என்ற வகையிலான திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் மற்றும் விவேக் - மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர். நரேன் இளன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனனின் உதவியாளர். கலைவாணன் எடிட்டிங் செய்ய, ஸ்டன்னர் சாம் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் ஏ.ஆர் வசனம் எழுத, வாசுகி பாஸ்கர் மற்றும் பல்லவி சிங் ஆடை வடிவமைப்பு பணியை கவனிக்கின்றனர். டி.உதயகுமார் ஆடியோகிராஃபி பணியை கவனிக்கிறார். வில்லவன் கோத்தாய் ஜி விஷுவல் எபெக்ட்ஸ் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்ற, ஸ்ரீ ரங்கராஜ் ஜே விஷுவல் எபெக்ட்ஸ் இயக்குநராக பணியாற்றுகிறார்.
ரீகர் ரீல்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்.எல்.பி சார்பில் கலை அரசு மற்றும் சுரேகா நியாபதி ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...