Latest News :

காதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகும் ‘கடமான்பாறை’!
Friday July-13 2018

மன்சூரலிகான்  தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு ‘கடமான்பாறை’ என்று பெயரிட்டுள்ளார்.

 

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாக, மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.    

 

மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரவிவர்மா இசையமைக்கிறார். விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். ஜெயகுமார் கலையை நிர்மாணிக்க, டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். ராக்கி ராஜேஷ் ஸ்டண்ட் துறையை கவனிக்க, ஜெ.அன்வர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

 

இப்படத்தை தயாரித்து இயக்கும் மன்சூரலிகான் படம் பற்றி கூறுகையில், “கலூரியில் படிக்கும் இளைஞர்கள் இப்போது வழிமாறி போகிறார்கள். அப்பா அம்மா, ஆசிரியர் என யார் சொன்னாலும் எதையும் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அப்படி இருக்கும் ஒரு காதல் ஜோடி கல்லூரியை கட்டடித்துவிட்டு. ஒரு மலைப்பகுதிக்கு செல்கிறார்கள். அந்த கங்குவாரெட்டி மலை, கஞ்சமலையை தன் வசம் வைத்திருக்கும் ஆதிவாசி சூரப்பன் மன்சூரலிகானிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அவனிடம் பாரஸ்ட் ரேஞ்சர் கூட மாட்டிக்கொண்டால் உயிரோடு திரும்ப முடியாது அந்த மலையில் இருந்து செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது, காட்டிலிருந்து எந்த பொருளும் வெளியே விடாமல் அந்த காட்டின் பாதுகாவலனாக இருக்கும் அவனிடம் சிக்கிய ஜோடி தப்பிதார்களா இல்லையா என்பதுதான் இந்த கடமான்பாறை படத்தின் திரைக்கதை. திகிலூட்டும் காட்சிகள் மக்களை ரசிக்கவைக்கும்.

 

படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.” என்றார்.

Related News

3019

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

Recent Gallery