மக்கள் செல்வன், ரசிகனை ரசிக்கும் தலைவன், என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி, இதுவரை நடித்தப் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள ‘ஜுங்கா’ வரும் ஜூலை 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் நாயகி சாயீஷாவை தவிர மற்ற அனைவரும் கலந்துக்கொண்டார்கள். கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கும் மடோனா சபஸ்டியன் உள்பட.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இது தான் ஜுங்காவில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம். அதன் பிறகு தான் அருண் பாண்டியன் வந்தார். அவரை ஒரு ‘கருப்பு தங்கம் ’ என்று சொல்லலாம். அவருக்கும் எனக்கும் இடையே எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லை. படத்தின் கதையை கேட்காமல் தயாரிக்க முன்வந்தார். வாங்கவும் முன்வந்தார்.இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது அவரின் அனுபவ வெளிப்பாடு என்று நினைக்கிறேன். ‘உங்களுடைய கதை தேர்வு நன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்க முன்வந்தேன்.’ என்று என்னிடம் முதல் முறை சந்திப்பின் போது சொன்னார்.
ஆஸ்திரியாவில் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இயக்குநரிடம் தொலைபேசி மூலம் கதையின் ஒன் லைன் என்ன என்று கேட்டார். அதன் பிறகு படத்திற்கு பட்ஜெட் போடுவதாகட்டும், லொகேசன் தேடுவதாகவும் எதிலும் தலையிடவில்லை. தணிக்கைக்கு அனுப்பும் போது தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தை ஒரு முறை பார்க்கவேண்டும் என்ற காரணத்தால் படத்தை ஒரு முறை பார்த்தார். நான் கோகுல் மீது நம்பிக்கை வைப்பதும், கோகுல் என் மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது. இயல்பானது. ஆனால் எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தார். அது தான் ஆச்சரியமான விசயம். இன்றைக்கு சந்தோஷமான விசயமும் கூட.
சரண்யா பொன்வண்ணன் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட். ‘தென்மேற்கு பருவகாற்று ’ படத்தில் அவர் நடிக்கும் காட்சியின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் காட்டும் அக்கறை என்னை வியக்க வைத்தது. அவரின் பொதுநலத்துடன் கூடிய இந்த சிந்தனை என்னை ஈர்த்தது. இந்த படத்தில் அவர் வடசென்னை ஸ்லாங் பேசுவதில் காட்டிய முயற்சி அவர் இந்த கலையை எவ்வளவு தூரம் உண்மையாக நேசிக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. ஒரு காட்சியை இயக்குநரின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செய்திடவேண்டும் என்ற அவர்களின் தவிப்பை நான் இந்த படத்தின் மூலம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். சரண்யா மேடத்துடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை வரமாக கருதுகிறேன்.
மடோனாவிற்கும் என் மீதும் பெரிய நம்பிக்கை. இயக்குநர் அந்த கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று எண்ணியவுடன், அவரைத் தொடர்பு கதையை கேட்குமாறு சொன்னேன். அவரும் கதையைக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி.
யோகி பாபுவுடன் ஆண்டவன் கட்டளைக்கு பிறகு நாங்கள் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம். படபிடிப்பு தளத்தில் அந்த கேரக்டருக்கு, அந்த தருணத்தில் என்ன பஞ்ச் பேச முடியுமோ அதை பேசி அசத்துவார். இந்த படத்தை நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம் உங்களின் சுவைக்காக இம்மாதம் 27 ஆம் தேதியன்று சமர்பிக்கிறோம்.” என்றார்.
இயக்குநர் கோகுல் பேசுகையில், “இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம். படத்தை ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறோம். வெற்றிப் பெறும் என்று உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என்றார்.
டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கின்ற்னார். மோகன் கலையை நிர்மாணித்துள்ளார்.
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...