மும்பை, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வருபவர்கள், தமிழகத்தின் கனவு கண்ணியாக பல ஆண்டுகள் வலம் வருவதோடு, தமிழகத்திலேயே வீடு, பங்களா, சொத்து என செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துவிட்டு பிறகு வாய்ப்பு இல்லாததால் தங்களது சொந்த ஊருக்கே மூட்டையை கட்டிவிடுகிறார்கள்.
அந்த வகையில், முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஹன்சிகா, தற்போது தனது சொந்த ஊரான மும்பைக்கு மூட்டையை கட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட ஹன்சிகா, சிம்பு உடனான காதல் விவகாரத்தால் பட வாய்ப்புகளை இழந்துவிட்டார். பிறகு காதல் முறிவு ஏற்பட்டு மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டினாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே சமயம், அவர் நடித்த படங்களும் சரியாக ஓடவில்லை.மேலும், அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் அறிமுக நடிகைக்கான சம்பளத்தை கொடுப்பதால், வெறுத்துப் போன ஹன்சிகா, தற்போது தமிழ் சினிமாவை விட்டே போக முடிவு செய்துவிட்டாராம்.

தமிழகத்தில் ஓட்டலில் தங்கியிருக்கும் அவர், பட வாய்ப்புகள் இல்லாததால் ஓட்டல் வாடகை கொடுக்க முடியாமல் சற்று சிரமப்படுவதாகவும், அதனால் தனது சொந்த வீடு இருக்கும் மும்பைக்கே சென்றுவிடவும் முடிவு செய்துவிட்டதாக கோடம்பாக்க டீக்கடைகளில் பேசப்படுகிறது.
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...