விஜய் சேதுபதி நடித்து தயாரித்திருக்கும் ‘ஜுங்கா’ தான் அவர் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட படமாகும். இப்படம் வரும் ஜூலை 27 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம் ஒன்றில் விஜய் சேதுபதி ராஜா வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரஞ்சவீ ஹீரோவாக நடிக்கும் படம் ‘சேரா நரசிம்மா ரெட்டி’. இதில் நயந்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கு மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கைப் படமாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி தமிழ் பேசும் அரசன் வேடத்தில் நடித்து வருகிறாராம்.
‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...