தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஊடகத்துறையில் கால் பதித்த சிவகார்த்திகேயன், நிகழ்ச்சி தொகுப்பாளராக உயர்ந்து பிறகு வெள்ளித்திரையில் ஹீரோவாக உருவெடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.
‘மெரீனா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், தனது காமெடி திறமையால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர், தற்போது அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு இருக்க கூடிய ஓபனிங்கோடு வசூல் மன்னனாக வலம் வருகிறார்.
இதற்கிடையே, சொந்தமாக திரைப்படங்களை தயாரிப்பதில் ஈடுபட்டு உள்ளவர், தற்போது பாடலாசிரியராகவும் உயர்ந்துள்ளார். நயந்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் எழுதிய “கல்யாண வயசு...” பெரிய ஹிட் ஆகியுள்ளது.
இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்திற்கு பாடல் எழுதியதற்காக சிவகார்த்திகேயன் பெற்ற சம்பள தொகையை மறைந்த பிரபல பாடலாசிரிய நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுகமான ‘மெரீனா’ திரைப்படத்தில் நா.முத்துக்குமார் மூன்று பாடல்கள் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...