‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது வாங்கிய பிரியா மணி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்தார். பிறகு வாய்ப்புகள் குறைந்ததால் மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இதற்கிடையே, பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, தொழிலதிபர் முஸ்தபா ராஜு என்பவருடன் பிரியா மணிக்கு நட்பு மலர்ந்தது. நாளடைவில் நட்பு காதலாக மாறி, நீண்ட ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக சுற்றி திரிந்தவர்கள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து இருவரது திருமணம் நிச்சயதார்த்தம் மூன்று மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற நிலையில், பிரியா மணி - முஸ்தபா ராஜ் திருமணம் நாளை (ஆக.23) பெங்களூரில் நடைபெற உள்ளது. திருமணத்தை பதிவு செய்ய உள்ளார்கள். பிறகு 24 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ள பிரியா மணி, இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துக் கொள்வதோடு, புது படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...