Latest News :

விஜயின் 63 வது படம்! - இயக்குநர் இவர் தான்
Wednesday July-18 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ அவரது 62 வது படமாகும். மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்குப் பிறகு விஜயின் 63 வது படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து அவ்வபோது சில தகவல்கள் வெளியானாலும், அவை அனைத்தும் வதந்திகளாகவே இருக்கின்றன.

 

இருந்தாலும், விஜயின் 63 வது படத்தின் இயக்குநர் யார்? என்ற எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

 

இந்த நிலையில், விஜயின் 63 வது படத்தை அட்லீ தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘தெறி’, ‘மெர்சல்’ என விஜய்க்கு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த அட்லீ, சொன்ன கதையை தான் விஜய் ஓகே சொல்லியிருக்கிறாராம். மேலும் சில இயக்குநர்கள் விஜய்க்கு கதை சொன்னாலும் அதில் அவர் திருப்தியடையவில்லை என்றே கூறப்படுகிறது.

 

மேலும், இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் அல்லது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் என இந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்று தான் தயாரிக்கப் போகிறதாம்.

Related News

3051

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery