சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி சுமார் 28 பேரால் தொடர்ந்து 7 மாதங்களாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், “அறுத்தெறியுங்கள்..” என்ற தலைப்பில் தனது ஆவேசத்தை வார்த்தைகளாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பார்த்திபன் வெளியிட்டிருக்கும் பதிவு இதோ:
அறுத்தெறியுங்கள்!!!
இந்த நிமிடம்
இதே மணிக்கு
இங்கோ அங்கோ எங்கோ
ஒரு பாலியல் வன் கொடுமை
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது ...
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய
நிகழ்வை பார்த்தபடி!!!
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர், ஈக்களாய் மொய்த்துக்
கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே
நம் கண்களையும் காதுகளையும்
கூர்மையாக்கி, ___- க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...