‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி, தற்போது வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கிறார். ‘கல்யாணமும் கடந்து போகும்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த வெப் சீரிஸை பின்றோம் பிக்சர்ஸ் சார்பில் சமீர் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இது குறித்து கூறிய பின்றோம் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமீர், “தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சாவூர், சேலம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இந்த கதை பல்வேறு இடங்களின் பின்னணியில் உள்ள, திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் பல்வேறு சமுதாய மக்களின் வாழ்வில் பயணிக்கும். ஒவ்வொரு அத்தியாயமும் வித்தியாசமான கதையைக் கொண்டிருக்கும், மற்றொன்றுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ள, ஒவ்வொரு கதாபாத்திரமும் முயற்சிக்கும் ஒரு பொதுவான தோற்றம் இருக்கும். அது ஒரு யதார்த்தமான அணுகுமுறையில், அதே நேரத்தில் கிண்டல் பாணியில் சொல்லப்பட்டிருக்கும்.” என்றார்.
நலன் குமாரசாமி கூறுகையில், இந்த அற்புதமான மற்றும் நகைச்சுவை வலைத்தொடருக்கு Viu போன்ற ஒரு பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...