விஜயின் ‘பைரவா’ படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக சிறு வேடத்தில் நடித்த அபர்ணா வினோத், பரத் நடிக்கும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
மேடை நாடகத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அபர்ணா, மலையாளத்தில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவரது நடிப்பு திறமை என்பது மிகவும் அப்பாரமானதாகும். அதனை நிரூபிக்கும் வகையில் அவருக்கு இன்னும் பெயரிடப்பாத பரத்தில் ஹீரோயின் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இது குறித்து கூறிய அபர்ணா வினோத், “நாடக கலைஞராக இருப்பதால், அது என் நடிப்பிற்கான சில துல்லியமான மாற்றங்களை பெற உதவியது. அது தான் 'ஞான் நின்னோடு', 'கோஹினூர்' போன்ற படங்களின் மூலம் எனக்கு நல்ல மைலேஜ் பெற உதவியது என்று உறுதியாக நம்புகிறேன்
இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எனது இரண்டு மலையாள திரைப்படங்களையும் பார்த்து, இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியான நீதியைச் செய்வேன் என்று உணர்ந்தனர். இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன். எனக்கு 22 வயது. தாய், ஆசிரியராக நடிப்பது மிக சவாலானது. இது என்னுடைய ஜோனுக்கு அப்பால் இருக்கிறது. ஆனால் என் கதாபாத்திரம் கேட்கும் விஷயங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன்.” என்றார்.
’இனிது இனிது’, ‘சார்லஸ் ஷாஃபிக் கார்த்திகா’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் ஷரண், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தரண் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் தொடங்க இருக்கிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...