Latest News :

இளம் ஹீரோவுக்கு அம்மாவான சிம்ரன்!
Wednesday July-18 2018

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘வி.ஐ.பி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சிம்ரன், தொடர்ந்து அஜித், விஜய், கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடனுடம், ஷாம், மாதவன் என பல இளம் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து விட்டார். 

 

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்திருப்பவர், ரஜினியுடம் மட்டும் நடிக்கவில்லை. இதற்கிடையே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் சிம்ரன் தான் ஹீரோயின். ஆம், அவர் தான் ரஜினிக்கு ஜோடி.

 

அதே சமயம், இந்த படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன், பாபி சிம்ஹாவுக்கு அம்மாவாகவும் நடிக்கிறார். ஆம், பாபி சிம்ஹா ரஜினிக்கு மகனாக நடிக்கிறார் என்றால், அவருக்கு அம்மா சிம்ரன் தானே.

 

2008 ஆம் ஆண்டு வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படம் தான் சிம்ரன் ஹீரோயினாக நடித்த கடைசிப் படம். அதன் பிறகு சில படங்களில் குண சித்திர வேடங்களில் நடித்து வருபவர், சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தில் வில்லியாகவும் நடித்து வருகிறார்.

Related News

3058

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery