தமிழகத்தில் அழுத்தமாக காலூன்ற நினைக்கும் பா.ஜ.க தமிழ் சினிமா பிரபலங்களுக்கு தூண்டில் போட்டு வருகிறது. இதுவரை பா.ஜ.க தூண்டிலில் இயக்குநர் கஸ்தூரிராஜா, கங்கை அமரன், நெப்போலியன், காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி ஆகியோர் சிக்க, தற்போது புதிதாக தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி சிக்கியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த், ‘ ’மலையூர் மம்பட்டியான்’, ‘சோலைக்குழி’ போன்ற படங்களை தயாரித்துள்ள அழகன் தமிழ்மணி, ‘நான் கடவுள்’, ‘அழகர்சாமியின் குதிரை’ போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார்.
நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் முன் தன்னை பா.ஜ.க, வில் இணைத்துக் கொண்ட அழகன் தமிழ்மணி, ”பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நிர்வாகம் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதன் காரணமாக என்னை பா.ஜ.க-வில் இணைத்து கொண்டேன்.” என்று கூறியுள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...