சினிமாவைப் போலவே தொலைக்காட்சி தொடர்களும் அதிகமான பொருட்ச் செலவோடு பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுவதோடு, காதல், ஆக்ஷன் என்று சினிமா பாணியில் எடுப்பதோடு, சில சர்ச்சையான விஷயங்களையும் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான ‘செம்பருத்தி’ சீரியலுக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சீரியலின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் இந்து கடவுளான ராமர் மற்றும் சீதை ஒன்றாக இருக்கும் சிலையை கீழே போட்டு உடைப்பது போல காட்டப்படுகிறது. இந்த காட்சி இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறி, வழக்கறிஞர் ஈஷ்வரமூர்த்தி என்பவர், திருப்பூர் போலீசில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...