Latest News :

‘பேய்பசி’ தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சி - வெங்கட் பிரபு பாராட்டு
Thursday July-19 2018

‘பார்ட்டி’ யை முடித்துவிட்டு ‘மாநாடு’ல் பிசியாக இருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, ’பேய்பசி’ படம் தமிழ் சினிமாவின் ஒரு வித்தியாசமான முயற்சி என்று பாராட்டியுள்ளார்.

 

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேய்பசி’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், ஸ்ரீகாந்த் தேவா, கார்த்திக் ராஜா, இயக்குநர்கள் நலன் குமராசாமி, வெங்கட் பிரபு, கிருத்திகா உதயநிதி, நடிகர் ஆர்யா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

Peipasi

 

நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், “ஹரி என்னுடைய சகோதரன் தான். எங்கள் குடும்பத்தில் சிறு வயதில் இருந்தே நடிக்க விரும்பியவன். அவனை என் படத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்று அவனுக்கு என் மேல் கோபம். அதன் பிறகு தனியாக முயற்சித்து ஒரு படத்தில் நடித்து விட்டான். படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லி, புரிய வைத்து தயாரிப்பாளரை ஒப்புக் கொள்ள செய்வது கஷ்ட்டம். அதை செய்து, விஷுவல் ரியாலிட்டி கான்செப்டில் படத்தை உருவாக்கியிருக்கிறார்.” என்று பாராட்டினார்.

 

இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் படம் குறித்து கூறுகையில், “முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது தான் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் முதுகெலும்பு யுவன் சங்கர் ராஜா தான். பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கல் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர். கதையை கூட கேட்கவில்லை. காஸ்ட்யூம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், “ஹரிக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். எங்கள் வீட்டில் கோபித்து கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டான். பின் நானே தயாரிக்க முடிவு செய்தேன், அதன் பின் இலங்கை சென்று விட்டான். தற்போது இந்த படத்தில் நடித்து விட்டான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னான். அன்புக்காக இசையமைத்திருக்கிறேன். அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்த காலகட்டத்தில் அவசியம். காசு, பணம் தாண்டி அன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும்.” என்றார்.

 

peipasi

 

தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் பேசுகையில், “என் தந்தை 90 களில் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டார். அதை நான் மீண்டும் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி. யுவனை மிகவும் தொந்தரவு செய்து நல்ல நல்ல பாடல்களை கேட்டு வாங்கியிருக்கிறோம். அவரும் இது என்னோட படம் என உரிமை எடுத்து எங்களுக்காக இசையமைத்து கொடுத்தார்.” என்றார்.

 

இயக்குநர் நலன் குமாரசாமி பேசும் போது, “இயக்குநர் சீனுவும், நானும் நண்பர்கள். சினிமாவில் எனக்கு நல்ல நண்பர்கள் அறிமுகமாக காரணம் சீனு தான். நல்ல சினிமா அறிவு உடையவர். சூது கவ்வும் படத்தில் பல விஷயங்கள் ஸ்ரீநிவாஸ் சொன்னது தான். இந்த படத்தில் பல புதுமையான, நல்ல விஷயங்களை எதிர்ப்பார்க்கிறேன்.” என்றார்.

 

நடிகர் ஆர்யா பேசுகையில், “ஹரி பாஸ்கர் என்னுடைய ஜிம் மேட். யுவன் இசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம். இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள். புது விஷயங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கல் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்த படமும் ஏற்றுக் கொள்ளப்படும்.” என்றார்.

 

ஸ்ரீகாந்த் தேவா பேசும் போது, “நானும் ஹரியும் இதே சத்யம் தியேட்டரில் நிரைய படங்கள் பார்த்திருக்கிறோம். அப்போது என்னுடைய படமும் இதே தியேட்டர்ல வரணும்னு ஆசையாக சொல்வான் ஹரி. தற்போது அதே இடத்தில் இசை வெளியீடு நடக்கிறது. தான் விரும்பியடஹி ஹரி சாதிப்பான்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது, “சூது கவ்வும் படத்துக்கு இசையமைத்த காலத்தில் இருந்தே ஸ்ரீநிவாஸ் கவிநயம் எனக்கு அறிமுகம். அவருடைய குறும்படம் ஒன்றை பார்த்தேன். நல்ல திறமையாளர், அவர் படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவர் இயக்கிய படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய முதல் படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா சார் தான் ரிலீஸ் செய்தார். இன்று அவர் படத்தின் இசை வெளியீட்டில் அவருடன் மேடையில் அமந்திருப்பது எனக்கு பெருமை.” என்றார்.

 

ஹீரோ ஹரி பாஸ்கர் பேசுகையில், “நடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. என்னை இயக்குநருக்கு அறிமுகப்படுத்தி வைத்த பூர்ணிமாவுக்கு நன்றி. நான் உட்பட 4 பேர் புதுமுகங்களாக அறிமுகம் ஆகிறோம். எங்களை வைத்து லைவ் சவுண்டில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம். மிகப்பெரிய சாதனை அது.” என்றார்.

Related News

3066

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery