பிக் பாஸ் போட்டியில் எலிமினட்டர் ரவுண்ட் தொடங்கிய நிலையில், வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அப்படி வெளியேறுபவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வரிசையில், பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய ஆனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் போட்டியால் உடல் அளவிலும், மனதளவிலும் நிறைய கஷ்ட்டங்களை அனுபவித்தேன், என்று கூறியிருக்கிறார்.
குரல் பயிற்சியாளரான ஆனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துக்கொண்டு, தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட அவர், ”பிக் பாஸ் நிகழ்ச்சி அனுபவம் குறித்து பேசுகையில், பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, உடல் அளவிலும், மன அளவிலும் பல கஷ்ட்டங்களை அனுபவித்தேன்.” என்று கூறினார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவாக இருந்தால் குடும்பத்தோடு நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம். நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என யாரும் உங்களை வற்புறுத்தவில்லை, என்றும் கூறியுள்ளார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...