பிரபல ஒளிப்பதிவாளரும், மதுரை வீரன் பட இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் ‘லிசா’. 3டி ஹாரார் படமாக உருவாகும் இதில் அஞ்சலி ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோவாக ஷாம் நடித்திருக்கிறார். மெலும், பாலிவுட்டின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ராஜு விஸ்வநாத் என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படம் தான், அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் உருவாகும் முதல் ஹாரார் படம்.
இந்த நிலையில், இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. 3டி எபெக்ட்டில் தோசைக்கல்லை தூக்கி கேமரா முன் அஞ்சலி வீச வேண்டும். ஆக்சன் என்றதும் அஞ்சலி கல்லை வீச, அது எதிர்பாரதவிதமாக கேமரா அருகில் இருந்த இயக்குநரின் நெத்தியில் விழுந்து, அவரது புருவம் கிழிந்தது.
காயமடைந்து வலியால் துடித்த இயக்குநர், அந்த நேரத்திலும் ஷாட் எப்படி வந்திருக்கிறது என்பதை பார்த்துவிட்டு பிறகு தான் மருத்துவமனைக்கு சென்று காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்டார். இந்த சம்பவத்தால் நேற்றைய படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...