Latest News :

ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்த அறிமுக நாயகன்!
Friday July-20 2018

இன்று வெளியாகியிருக்கும் ‘போத’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியிருப்பவர் ஆர்.எஸ்.விக்னேஷ்வரன் எனும் விக்கி.

 

தனது முதல் படத்திலேயே ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விக்கி, தனது நடிப்பு அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துக் கொண்டது இதோ,

 

சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை, காரணம் எனது தந்தை ராஜசேகரும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டவர் தான். பல வருடங்களுக்கு முன் ‘எத்தனை மனிதர்கள்’ உள்ளிட்ட ஒரு சில டிவி சீரியல்களில் தலை காட்டிய என் தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயில்ல முடியாமல் போய்விட்டது. அதனால், அவரது ஆசையை எனது ஆசையாகவும் லட்சியமாகவும் நான் எடுத்துக் கொண்டேன்.

 

அதன்படி, காலேஜ் புராஜக்ட் வேலை விஷயமாக சென்னை போகிறேன், என்று கூறிவிட்டு சென்னை வந்த நான், ஆக்டர்ஸ் ஸ்டுடியோ எனும் தனியா நடிப்பில் பள்ளியில் நடிப்புக் கற்றபடி நடிக்க வாய்பு தேடி அலைந்தேன்.

 

வடகறி, அச்சமில்லை அச்சமில்லை, நிலா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறியதும் பெரியதுமான வேடங்களில் நடித்தபடி, நடிப்புக் கற்றுக் கொண்ட நான், ஆக்டர்ஸ் ஸ்டுடியோ பள்ளியிலேயே மற்றவர்களுக்கு நடிப்பு கற்றுத் தந்தபடி, கோடம்பாக்கத்தில் தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தேன்.

 

பிறகு போத படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதில் நடித்து முடித்து படமும் வெளியாகிவிட்டது, என்று கூறியவரிடம், ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்சிருக்கீங்களாம? என்றதற்கு, அது சும்மா ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே சார், மொத்த திரைக்கதைலும் சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு, என பணத்தை சேஸ் பண்ணிப் போறது தான் என் கேரக்டர். படத்தில் ஹீரோயினே இல்லன்னாலும், காமெடியாக கதை சொல்லப்பட்டிருக்கும் போத படத்தை பேமிலியா போய் பார்க்கலாம், அதற்கு நான் கேரண்டி, என்றும் கூறுகிறார்.

Related News

3074

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery