செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் லண்டனில் தொடங்கியது. இதில் ஹீரோயினாக சாயீஷா நடிக்க, வில்லனாக ஆர்யா நடிக்கிறார். இவர்களுடன் மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், தேதி பிரச்சினை காரணமாக இந்த படத்தில் இருந்து தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது தெலுங்கில் உருவாகும் ஏபிசிடி படத்தில் நடித்து வருகிறேன். இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடப்பதால் சூர்யா படத்தில் என்னால் இடம்பெற முடியவில்லை. படப்பிடிப்பை வேறு தேதியில் மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நானாகவே இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன், என்று அவர் அல்லு சிரிஷ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...