Latest News :

படத்தின் வெற்றியால் தான் என் குடும்பம் ஒன்று சேரும் - ஹீரோயினின் உருக்கமான பேச்சு
Friday July-20 2018

நாகை பிலிம்ஸ் கே.டி.முருகன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘வினை அறியார்’. ‘கோலி சோடா’ புகழ் முருகேஷ், ‘என்னை அறிந்தால்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜாக், உதயராஜ், குரு, கமலி என்று விடலைப் பசங்களுடன் சிசர் மனோகர், நிர்மலா ஆகியோர் நடித்ஹ்டிருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு அன்பரசு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை தஷி அமைத்திருக்கிறார்.

 

இப்படத்திற்கு ரஞ்சித் ஒளிப்பதிவு செய்ய, பன்னீர் செல்வம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். மக்கள் தொடர்பை சரவணன் கவனிக்கிறார்.

 

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னை எம்.எம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநரும் நடிகருமான மனோஜ்குமார், இயக்குநர் சண்முகசுந்தரம், பாடலாசிரியர் விவேகா மற்றும் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய நாயகி கமலி, “என் அப்பா அம்மாவிடம் இருந்து எனக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், எனக்குப் பிடிக்காத என்னால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட என் பாட்டி தான் எனக்கு உதவியாக இருந்தார். இந்த மேடையில் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது அவரது வீட்டில் தான் இருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் என் பெற்றொரைப் பார்ப்பேன். நான் நாயகியாக நடிப்பதில் என் பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை. இந்தப் படம் வெற்றி பெற்று என் குடும்பம் ஒன்று சேர வேண்டும். ஹீரோ என்னைவிடச் சின்னைப்பையனா தெரிகின்றாரே என்று தயங்கினேன். ஆனால், ஸ்கினில் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.” என்றார்.

 

Actress Kamali

 

பாடலாசிரியர் விவேகா பேசும் போது, வினை அறியார் என்று மிகவும் அழகான வார்த்தையைத் தலைப்பாக வைத்திருக்கின்றார் கே.டி.முருகன். தாங்கள் செய்யும் செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகள் தான் வினை. அதை அறியாத விடலைப்பசங்களான நாயகன், நாயகியர் செய்யும் செயல்கள் தான் படம் என்று யூகிக்க முட்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் மனோஜ்குமார் பேசும் போது, “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் நான், செயலாளர் நீங்க. ஆகவே, நான் இயக்கித் தயாரித்திருக்கும் படத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்று வெள்ளந்தியான ஒரு அதிகார தோரணையில் அழைத்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதுபோன்ற எளிமையான கலைஞரின் படைப்புகளுக்கு எங்கள் சங்கம் என்றும் துணை நிற்கும்.” என்றார்.

 

இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.டி.முருகன் பேசுகையில், “25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக இந்த மேடையில் நிற்கின்றேன். 2012 ஆம் ஆண்டு ‘வங்கக்கரை’ என்கிற படத்தை எடுத்தேன். போதிய முன் அனுபவம் இல்லாததால், அதனைச் சரியாகக் கொண்டு சேர்க்க முடியவில்லை. ஆனால், அதில் கிடைத்த பல அனுபவங்களுடன் வினை அறியார் படத்தை தயாரித்து இயக்கியிருக்கின்றேன். ரசிகர்களுக்குப் போட் அடிப்பது போல ஒரு காட்சி கூட இதில் இருக்காது. ஆகஸ்டு 24 ஆம் தேதி இப்படத்தை திரையிட உள்ளேன்.” என்றார்.

Related News

3077

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery