Latest News :

’இம்சை அரசன் 24ம் புலிகேசி’ பஸ்ட் லுக் ரிலீஸ்!
Wednesday August-23 2017

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. காமெடி நாயகன் வடிவேலு முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்த இப்படத்தை சிம்பு தேவன் இயக்க, இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார்.

 

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டாலும், படத்தில் நாட்டில் நடக்கும் சில அவங்களை நகைச்சுவையாக சுட்டிக்காட்டியிருந்தார் இயக்குநர் சிம்புதேவன். விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு தேவன் கூறிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோடு, பணிகளும் தொடங்கியது.

 

இந்த நிலையில், ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’ என்ற தலைப்புடன், இம்சை அரசனின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

’ராஜ டரியலுடன் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்’ என்ற வாசகத்தோடு, போஸ்டரே நமக்கு குபீர் சிரிப்பை வரவைக்க, படம் என்ன பாடுபடுத்தப்போகிறதோ!

 

வாங்க ராஜா காத்திருக்கிறோம்!

Related News

308

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery