நடன இயக்குநராக இருந்த லாரன்ஸ், ‘முனி’ படம் மூலம் நடிகர் மற்றும் இயக்குநரானார். பிறகு முனி படத்தின் இரண்டாம் பாகமாக ‘காஞ்சனா’ படத்தை இயக்கியவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவாக உருவெடுத்தார். அதேபோல், முனி மூன்றாம் பாகமாகந் ‘காஞ்சன-2’ படத்தை எடுத்து அதிலும் பெறிய வெற்றி பெற்றார்.
இதற்கிடையே தொடர் வெற்றியால் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்த லாரன்ஸ், நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படுமோசமான தோல்வியை சந்திக்க, பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்த ‘சிவலிங்கா’ படமும் பிளாப்பாகிவிட்டது.
இந்த நிலையில், இனி கமர்ஷியல் படங்கள் வேண்டாம், தனக்கு தொடர் வெற்றியை கொடுத்த ‘காஞ்சனா’ பேயே போதும், என்று எண்ணிய ராகவா லாரன்ஸ் தற்போது மீண்டும் தனது பேய் பயணத்தை தொடங்கியுள்ளார்.
முனி படத்தின் நான்காம் பாகமாக உருவாகும் இப்படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவலை விரைவில் அறிவிக்க உள்ளார்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சார்’...
உண்மை குற்ற சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘யாத்ரீகன்’...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்...