திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ திகில் படம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகிறது.

‘மதுர’, ‘சாக்லெட்’, ‘அரசாங்கம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மாதேஷ், இயக்கியிருக்கும் ’மோகினி’ படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு லண்டன், ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரிஷா மோகினி மற்றும் வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் திரிஷா நடிக்க தொடங்கினாலும், ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிப்பாராம். அதேபோல் நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பாராம்.

தனது சொந்த வாழ்க்கையில் இதுவரை எந்த பேய் அனுபவத்தையும் சந்திக்கவில்லை என்றாலும், திரிஷாவுக்கு பேய் மீது நம்பிக்கை இருக்கிறதாம்.



கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படைப்பில் இணைந்துள்ளார்...
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’...
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...