தெலுங்கு சினிமாவை பரபரப்பில் ஆழ்த்திய ஸ்ரீ ரெட்டி தற்போது தமிழ் சினிமாவை பரபரப்பில் ஆழ்த்தி வருகிறார். முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது அவர் செக்ஸ் புகார் கூறியதோடு, அது குறித்து தற்போது பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
ஸ்ரீ ரெட்டியிடம் மாட்டிய தமிழ் சினிமா பிரபலங்கள்
பட வாய்ப்பு தருவதாக தன்னிடம் செக்ஸ் வைத்துக் கொண்டவர்கள் என்று பிரபல இயக்குநர்கள் ஏ.ஆ.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் ஆகியோரது பெயர்களை வெளியிட்டிருக்கும் ஸ்ரீ ரெட்டி, நடிகர் ஸ்ரீகாந்தை கேவலமாக திட்டியிருக்கிறார்.

இதனால், அவர் மீது தமிழ் சினிமா நடிகர்கள் பெரும் கோபத்தில் இருக்க, ஸ்ரீ ரெட்டியோ, தான் தமிழகத்தில் செட்டிலாகப் போவதாக தெரிவித்ததோடு, தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள், என்று பலர் மீது புகார் கூறிய ஸ்ரீ ரெட்டிக்கு தமிழ் சினிமாவில் யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு தயாரிப்பாளர் ஸ்ரீ ரெட்டியை தனது படத்தில் நடிக்க வைக்க தயாராக இருப்பதாக டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு கொடுக்கும் தமிழ் தயாரிப்பாளர்
ஆம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வரும் நடிகை குட்டி பத்மினி, ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு கொடுக்க தான் தயார், என்று சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

சம்மந்தப்பட்ட சேனல், ஸ்ரீ ரெட்டியின் செக்ஸ் புகார் குறித்து பலரிடம் கருத்து கேட்டு வருகிறது. அந்த வகையில் நடிகையும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினியிடம் கருத்து கேட்ட போது, ஸ்ரீ ரெட்டி விரும்பினால் அவரை என் படத்தில் நடிக்க வைக்க நான் தயாராக இருக்கிறேன், என்று அவர் கூறினார்.
கார்த்தி பேட்டி

ஏற்கனவே, நடிகர் சங்கத்தின் பொருளாளரான கார்த்தி, ஸ்ரீ ரெட்டி மீது யாராவது புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுப்போம், என்று கூறியிருந்த நிலையில் நடிகை குட்டி பத்மினியின் இந்த பேட்டி கோடம்பாக்கத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...