‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சாயீஷா, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், ‘ஜுங்கா’, ‘கஜினிகாந்த்’ என அவர் நடித்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், மறைந்த நடிகரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் உடன் சாயீஷா டூயட் பாடப் போகிறார். ஆம், அவர் எம்ஜிஆர் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் கனவுப் படமான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ தற்போது அனிமேஷன் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் அருள்மூர்த்தி அனிமேஷன் பணிகளையும் மேற்கொள்கிறார்.
இப்படத்தில் எம்.ஜி.ஆர்க்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க, மற்றொரு ஹீரோயினாக சாயீஷாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதனால், சாயீஷா உருவம் கொண்ட நடிகையை அனிமேஷன் மூலம் இப்படத்தில் நடிக்க வைக்க உள்ளனர். இதற்காக சாயீஷாவுடன் பேசி ஒப்பந்தமும் செய்துவிட்டார்களாம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...