திரிஷா நடிப்பில் வரும் ஜூலை 27 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘மோகினி’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் லக்ஷ்மன் தயாரித்திருக்கும் இப்படத்தை ஆர்.மாதேஷ் இயக்கியிருக்கிறார்.
திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மோகினி, வைஸ்ணவி என இரண்டு வேடங்களில் திரிஷா நடித்திருப்பதோடு, அதிரடியான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம்.
திகில் படம் மற்றும் பேய் இது இரண்டையும் வேறு ஒரு பாணியில் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும் இப்படம் முன்னணி ஹீரோக்களின் படங்களைப் போல ரொம்ப பிரம்மாண்டமான முறையில் வெளியாக இருக்கிறதம்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களிலும் சுமார் 600 திரையரங்கங்களில் வெளியாகும் இப்படம் தமிழிலும் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால், அதே தினத்தில் வெளியாக இருக்கும் முன்னணி ஹீரோ ஒருவரது படத்திற்கு குறைந்த அளவே தியேட்டர்கள் கொடுக்கப்பட்டு அந்த ஹீரோ ஓரம் கட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மக்களிடம் செல்வனாக இருக்கும் அந்த ஹீரோவின் சமீபத்திய படங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், திரிஷாவின் படங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...