Latest News :

’நாளைய இயக்குநர்’ன் இயக்குநர் இயக்கும் படம்
Tuesday March-29 2016

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு பல வெற்றி இயக்குநர்களை அடையாளம் காட்டிய ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியை இயக்கும் அழகுராஜா, முதல் முறையாக திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்திற்கு ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

பிக் பிலிம் இண்டர்நேஷன் சார்பில் கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக ஆதவ நடிக்க, நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர்களுடன் கானா உலகநாதன், மதுமிதா, சிங்கப்பூர் தீபன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

இசை - லியாண்டர் லீ, ஒளிப்பதிவு சந்தான கிருஷ்ணன், கலை - மகி, ஸ்டண்ட் - ஆக்‌ஷன் பிரகாஷ், நடனம் - செளமியா, தயாரிப்பு மேற்பார்வை - ஆத்தூர் ஆறுமுகம், இணை தயாரிப்பு எம்.செந்தில் பாலசுப்ரமணியம்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அழகுராஜ். படம் குறித்து கூறிய அழகுராஜ், “காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் படம் இது.  சின்ன திரை நிகழ்ச்சியில் மிக பிரபலமானது நாளைய இயக்குனர் தொடர். அந்த போட்டியிலிருந்து இதுவரை நிறைய இயக்குனர்கள் படம் இயக்கி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இயக்குனர் அழகுராஜ் இயக்கும் முதல் படம் தான் இந்த “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “ முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக உள்ளது. படப்பிடிப்பு விரைவில் துவங்கி சென்னை, கோவை மற்றும் கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது” என்றார்.

Related News

31

விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புதிய படத்தின் அறிவிப்பு!
Friday April-17 2026

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது...

திரையுலகில் புதிய புரட்சி ஏற்படுத்தப்போகும் ‘பிக் பிட்ச்சர்’ நிகழ்ச்சி!
Friday April-17 2026

இந்திய பொழுதுபோக்குத் துறையின் போக்கையே மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாக, கேமென் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Gammen Sports and Entertainment Pvt...

நடிப்பிலும் படிப்பிலும் அசத்தும் சிறுவன்! - வாழ்த்தும் பிரபலங்கள்
Friday April-17 2026

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த பினு...

Recent Gallery