சுமார் 600 படங்களுக்கு மேல் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ள அல்வா வாசு, கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சை பலன் இன்றி, கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
உயிரிழந்த அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். அவரது இழப்பை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பண உதவி செய்ததோடு, பிற நடிகர் நடிகைகளும் அவரது குடும்பத்திற்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால், தனது தேவி அறக்கட்டளை சார்பாக, உயிரிழந்த்ய அல்வா வாசுவின் மகளின் படிப்பு செலவிற்காக ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...