Latest News :

ஆகஸ்ட் மாதம் வெளியாகும் ‘ஓடு ராஜா ஓடு!
Tuesday July-24 2018

‘ஜோக்கர்’ படம் மூலம் ஹீரோவான குரு சோமசுந்தரம், தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வரும் படம் ‘ஓடு ராஜா ஓடு’.

 

ஜதின் என்பவர் இயக்கும் இப்படம் காமெடி திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் புரோமோ பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார்.

 

குணச்சித்திரம், ஹீரோ என எந்த வேடமாக இருந்தாலும், தனது நடிப்பால் அந்த வேடத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைக்கும் குரு சோமசுந்தரத்தின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓடு ராஜா ஓடு’ படம் ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, இப்படத்தின் டீசரும் தற்போது வைரலாகி வருகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தினை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

3101

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery