நடிகர் தனுஷின் படங்களில் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல தனுஷுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் என்றால் அது ‘புதுப்பேட்டை’ தான். செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படம் ஒட்டு மொத்த திரையுலகையே திருப்பி போட்ட படம் என்றும் சொல்லலாம்.
தனுஷின் வித்தியாசமான கதாபாத்திரம் மட்டும் இன்றி, சினேகாவின் வித்தியாசமான நடிப்பும் கதாபாத்திரமும் இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

இந்த நிலையில், வரும் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் ஜூலை 26 ஆம் தேதி சென்னையில் சில திரையரங்குகளில் ‘புதுப்பேட்டை’ படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறதாம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...