Latest News :

தென் மாவட்ட மக்களின் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் ‘அழகுமகன்’!
Wednesday July-25 2018

அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அழகுமகன்’. அர்ஜுன் உதய் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் மாளவிகா வேல்ஸ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இளவரசு, ராஜ்கபூர், ஜி.எம்.குமார், சிங்கம் புலி, பவன், சேரன்ராஜ், செந்தி, நித்திஸ், விசித்திரன், வைரவன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

அகு அஜ்மல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார். யுகபாரதி, தாமரை, மோகன்ராஜ் ஆகியோர் பாலடல்கள் எழுதியிருக்கிறார்கள். முருகன் கலையை நிர்மாணித்துள்ளார். மகேஷ் ஜி.கே எடிட்டிங் செய்ய, பயர் கார்த்திக் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ராதிகா நடனம் அமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அழகன் செல்வா இயக்குகிறார். இவர் யார் கண்ணன், கரு.பழனியப்பன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். செல்வி ராஜேந்திரன், ஞானதேஸ் அம்பேத்கார் ஆகியோர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

 

படம் குறித்து இயக்குநர் அழகன் செல்வா கூறுகையில், “இது ஒரு பக்கா கமர்ஷியல் படம். தென் மாவட்ட மக்களின் உணர்வுகளையும், உணர்சிகலையும் பிரதிபலிக்கும் படம். அன்பை பிரதிபலிப்பதும், அராஜகத்தை எதிர்த்து வெகுண்டெழுவதும் அவர்களது இயல்பு. தென்மாவட்ட மண்ணின் மகிமையையும் அதன் மக்களின் கலாச்சாரத்தையும் இதில் காட்டி இருக்கிறோம். 

 

அர்ஜுன் உதய் மற்றும் அவர்களது நண்பர்களும் எதிர்கால சிந்தனை எதுவும் இன்றி ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்கள். நான்கு நண்பர்களும் நான்கு விதமான வாழ்க்கை சூழ் நிலையில் வாழ்பவர்கள்.

 

அர்ஜுன் உதய்க்கும் மாளவிகா வேல்ஸ்க்கும் அழகான காதல் ஒரு பக்கம்.

 

இதற்கிடையே, அர்ஜுன் உதய் ஒரு பிரச்சினையில் சிக்க, அதனால் அவனது வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவனுக்கு மட்டுமல்லாமல் அவனது நண்பர்களுக்கும் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படுகிறது என்பதும் கதை.

 

பெரியகுளம், தேனி, போடி, கேரளா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.” என்றார்.

 

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் ‘அழகுமகன்’ வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகிறது.

 

இப்படத்தை பார்த்த பிரபல விநியோகஸ்தர் ஸ்ரீ முருகன் சினி ஆர்ட்ஸ் செல்வம் தமிழகம் முழுவதும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்.

Related News

3109

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery