சின்னத்திரை தொடர்களில் நடிப்பவர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர்களும் பல்வேறு சர்ச்சையான விஷயங்களில் சிக்கி வரும் நிலையில், பிரபல டிவி தொகுப்பாளினி ஒருவர் மோசடி வழக்கில் கைதாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயா டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருப்பவர் அனிஷா. இவர் தனது கணவருடன் சேர்ந்து ஸ்கை எக்யூப்மெண்ட் என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வந்திருக்கிறார். இதற்கிடையே பிரசாந்த் என்பவரிடம் இருந்து 101 வீட்டு ஏ.சி களை வாங்கிய அனிஷா அதற்கான பில் தொகைக்கு செக் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால், அவர் கொடுத்த செக் வங்கியில் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டது.
இதையடுத்து, அனிஷாவை தொடர்பு கொண்டு பிரசாந்த் பணம் கேட்க, சரியான முறையில் பதில் சொல்லாத அனிஷா, அவரை மிரட்டும் தோனியிலும் பேசியதாக கூறப்படுகிறது.
இதன் பிறகு கே.கே. நகர் காவல் நிலையத்தில் பிரசாந்த் புகார் தெரிவிக்க, அதன் பேரில் தொகுப்பாளினி அனிஷாவையும், அவரது கணவரின் தம்பியையும் போலீசார் மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர்.
அனிஷாவின் கணவர் தலைமறைவாகியுள்ளதால் அவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...