தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்த டாப்ஸி, தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ‘நாம் சபானா’ படத்தில் நடித்த பிறகு இந்தி சினிமாவில் டாப்ஸிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.
’முல்க்’, ’மேன் மர்ஷியான்’, ’தட்கா’, ’பத்லா’ உள்ளிட்ட பல இந்திப் படங்களில் நடித்து வரும் டாப்ஸிக்கும், டென்மார் நாட்டை சேர்ந்த பேட்மிண்டர் வீரர் மத்யாசுக்கும் காதல் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாக மும்பை நகரில் வலம் வந்தார்கள்.

இந்த நிலையில், டாப்ஸிக்கும், மத்யாசுக்கும் ரகசியமாக் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவாவில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் டாப்ஸி மற்றும் மத்யாசின் குடும்பத்தார் மட்டுமே கலந்துக் கொண்டார்களாம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...