மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே அஜித்தின் ‘விவேகம்’ நாளை (ஆக.24) உலகம் முழுவதும் வெளியாகிறது.
சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் தொடர்ந்து மூன்றாவது படமாக உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடித்திருக்கிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஒபரான் நடித்திருக்கிறார்.
மேலும், ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற்றுள்ள இப்படம் பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ளது.
கதை குறித்த் சில தகவல்கள் கசிந்தாலும், படத்தில் ஏராளமான சஸ்பிரைஸ் விஷயங்கள் இருப்பதாக கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், உலகம் முழுவதும் சுமார் 3520 திரையரங்குகளில் ‘விவேகம்’ வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் வெளியாகும் ‘விவேகம்’, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 450 திரையரங்கங்களிலும், கேரளாவில் 300 திரையரங்குகளிலும், கர்நாடகாவில் 300 திரையரங்குகளிலும் வெளியாகிறது.
மலேசியாவில் 700 திரையரங்கங்களில் வெளியாவதுடன், அமெரிக்காவில் 340 திரையரங்கங்களிலும் மற்ற நாடுகளில் 360 திரையரங்கங்கள், என மொத்தம் 3250 திரையரங்கங்களில் வெளியாவதாக கூறப்படுகிறது.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...