லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையோடு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயந்தராவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கு ரசிகர்களிடம் மட்டும் இன்றி சினிமா வியாபாரிகளிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறதாம். அதனால், படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த உடனேயே, பல திரையரங்கு உரிமையாளர்கள் கோலமாவு கோகிலா படத்தை போட முன் வந்திருக்கிறார்கள்.
இது குறித்து படத்தின் இயக்குநர் நெல்சன் கூறுகையில், “தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய நிறுவனமாக தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நம்ப முடியாதவை. மேலும், எந்த வியாபாரத்திலும் வெற்றி பெறும் ரகசியம் 'சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விஷயங்களை செய்வது லைக்காவிற்கு இவை மிகவும் பொருத்தமானவை. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ், கோலமாவு கோகிலாவை தங்களது சிறப்பான விளம்பர யுக்திகளால் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது.” என்றார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...