5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்ததோடு, 50 ஆண்டுகள் திமுக-வின் தலைவராகவும் இருக்கும் மு.கருணாநிதி, தற்போது உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து பரவிய தகவலால், கடந்த இரு தினங்களாக தமிழகமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மு.கருணாநிதியை அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலர் பார்க்க வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் அஜித்துக்கும், கருணாநிதிக்கும் இடையே நடந்த நிகழ்வு குறித்தும், அப்போது கருணாநிதியை அஜித் சந்தித்தது குறித்தும் ரீவைண்ட் செய்திருக்கும் அவரது ரசிகர்கள் அவற்றை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
அதாவது, கருணாநிதி முதல்வராக இருந்த போது ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற தலைப்பில் திரையுலம் அவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்தியது. அதில் கலந்துக்கொண்ட அஜித், “அய்யா எங்களுக்கு அரசியல் வேண்டாம், நடிகனாக இருக்க விடுங்க, நீங்க முடிவு எடுங்க, நாங்க துணை நிற்போம். ஆனால், பலர் அதிகாரத்தை மிஸ்யுஸ் செய்கிறார்கள்” என்று பேச அரங்கமே ஒரு கணம் அதிர்ந்து போனது. ஆனால், அதில் சிலர் அஜித்தின் தைரியத்தை பாராட்டினார்கள்.
கருணாநிதியும், அஜித்தின் தைரியத்தையும், வெளிப்படத்தன்மையையும் பாராட்டியதோடு, தன்னை சந்திக்க வீட்டுக்கு வந்த அஜித்தை அன்போடு தட்டிக்கொடுத்தார்.
இந்த நிகழ்வும், இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்க்கதவர்களு இதோ,
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...