வாரம் 5-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலிஸாகி கொண்டிருந்த தமிழ் சினிமாவில் கடந்த வாரமும், இந்த வாரமும் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை. காரணம் ‘விவேகம்’. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்காக பல படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்ட நிலையில், நாளை சோலோவாக களம் இறங்குகிறது ‘விவேகம்’.
உலகம் முழுவதும் 3250 திரையரங்கங்களில் வெளியாகும் ‘விவேகம்’ குறித்து பல தகவல்கள் அவ்வபோது கசிந்தாலும், படக்குழு படத்தின் கதை உள்ளிட்ட முக்கிய விபரங்களை சஸ்பென்ஸாக வைத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று ‘விவேகம்’ படத்தின் கதை இது தான், என்று சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ஆங்கிலப் படமான ‘புரோக்கன் ஏரோ’ படத்தின் தழுவல் தான் ‘விவேகம்’ என்ற தகவல் உலா வரத் தொடங்கியுள்ளது.
ராணுவத்தில் திறமை வாய்ந்த இருவர், விபத்தில் சிக்கி கீழே விழுந்த உடைந்த ராக்கெட் ஒன்றை தேடி கண்டுபிடிக்க அனுப்பப்படுவார்கள். ஆனால், அதில் ஒருவர் அரசாங்கத்திற்காக வேலை பார்க்க, மற்றொருவரோ வில்லன் கூட்டத்திற்காக வேலை செய்வார். ஹீரோ எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிய, பிறகு தான் தெரியும் அதற்கு பின்னால், தன்னுடன் பயிற்சி பெற்ற தனது நண்பனின் சதி தான் இது என்று. பிறகு என்ன நடக்கிறது என்பது தான் அப்படத்தின் கதை. ’விவேகம்’ படத்தின் கதையும் ஏறக்குறைய இதுபோலதான் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...