கடந்த 16 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் திரிஷா. பெரிய அளவில் எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் இருந்த இவர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து கல்யாணம் செய்ய இருந்த நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணம் நின்றுவிட்டதோடு, காதலர்களும் பிரிந்துவிட்டனர்.
அட, இப்போ சொல்ல வருவது கல்யாணத்த பத்தியோ காதல பத்தியோ அல்ல, திரிஷாவின் நடிப்பு கேரியரை பத்திதான். அதாவது, திருமணம் நின்றதற்கான காரணமாக, தன்னை தொடர்ந்து நடிக்க கூடாது, என்று கூறியதால் திருமணத்தை நிறுத்துவிட்டேன், என்று கூறிய திரிஷா, மகப்பேறு காலத்தில் மட்டும் நடிப்புக்கு ஓய்வு கொடுப்பேன், மற்றபடி சாகும் வரை நடித்துக்கொண்டு தான் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால், அப்படி அவரால் சாகும் வரை நடித்துக் கொண்டு இருக்க முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுவிட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.
ஹீரோக்களுடன் டூயட் பாடிக்கொண்டிருந்த திரிஷா, தற்போது நயந்தாரா பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், அவரது நடிப்பில் நேற்று ‘மோகினி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்த படம் வெளியானதா அல்லது வெளியாகவில்லையா என்பது கூட தெரியாத வகையில், படம் குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும், படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றம் செய்த போது கூட தொடர்ந்து புர்மோஷன் செய்யப்பட்டு வந்த நிலையில், படம் ரிலிஸான பிறகு படத்திற்கான புரோமோஷன்கள் துளி கூட இல்லாமல் போனது படத்திற்கு பெரிய அடியாக அமைந்திருக்கிறது.
சரி இதை விடுங்க, பொதுவாக ஒரு படம் எப்படி இருந்தாலும், பத்திரிகைகளுக்காக ஒரு காட்சி திறையிடப்படுவது வழக்கம், அப்போது படம் பார்க்கும் செய்தியாளர்கள் விமர்சன் எழுதவும் செய்வார்கள். ஆனால், திரிஷாவின் ‘மோகினி’ படத்திற்கு பத்திரிகையாளர் காட்சி கூட இதுவரை போடவில்லை. அட இந்த படத்திற்கு மட்டும் இல்ல, இதற்கு முன் திரிஷாவின் நடிப்பில் வெளியான ‘நாயகி’ என்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்திற்கும் இதே நிலை தான்.
ஆக, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கும் திரிஷாவுக்கும் ராசியே இல்லை போலிருக்கே!
‘கர்ஜனை’ படமாவது தப்பிக்குமா என்று பார்ப்போம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...